கரோனா பீதிக்கு இடையில் இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு

பரிமலை

ன்று பங்குனி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலைக் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தில் மாத பூஜை நடப்பது வழக்கமாகும்.  அந்த பூஜைகளுக்காக ஐந்து நாட்கள் கோவில் நடை திறக்கப்படும்.   அதன் பிறகு நடை அடைக்கப்படும்.  அவ்வகையில் இன்று மாலை பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலைக் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.  வரும் 18 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

தற்போது உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக மெக்கா, வாடிகன் உள்ளிட்ட தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.   இந்த பீதி காரணமாக இம்முறை பக்தர்கள் வர வேண்டாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு ஆகியவை வேண்டுகோள் விடுத்திருந்தன.

இம்முறை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என கேரள அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.  அத்துடன் பம்பை, சன்னிதானம் போன்ற இடங்களில் வழக்கம் போலப் பக்தர்கள் தங்க அறைகள் வழங்கப்போவதில்லை எனவும் அப்பம் அரவணை விற்பனை கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.