சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி

சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் தனபால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர் உள்ளிட்டோர் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 49 ஆவது தலைமை நீதிபதியாக ஏபி சஹி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்யப்பட்டது.

ஏபி சஹி அவர்கள் 1985ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்தார் பின்னர் 2004 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் 2005 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் 2018 ஆம் ஆண்டு நவம்பரில் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.