அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல்: அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு இல்லை..?

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக, ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள வாய்ப்பில்லை.

நாளை மறுநாள், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட 170 முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் வயோதிகம் காரணமாக காணொலி மூலம் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. முன்னதாக, அக்கட்சியின் முக்கிய தலைவரான உமா பாரதி கொரோனா காரணமாக அயோத்தி நிகழ்வில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.