மத்திய அமைச்சராகிறார் அமித்ஷா! ராஜ்ய சபாவுக்கு மனுதாக்கல்

டில்லி,

பாரதியஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் விரைவில் மத்திய அமைச்சராவார் என்று டில்லி பாரதியஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கினறன.

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்யசபா தேர்தலில் போட்டி யிடுவதற்காக இன்று மனுதாக்கல் செய்துள்ளார். அவருடன் மத்திய அமைச்ச்ர ஸ்மிருதி இரானி மற்றும் பால்வாந்தினி ராஜ்புட் ஆகியோரும் குஜராத் சார்பாக  ராஜ்ய சபா தேர்தலில் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பாராளுமன்றத்தில் பா.ஜ., திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் 9 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் ( ஆகஸ்ட்டு) 18ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம்  டில்லியில் நடந்த பா.ஜ. ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுபடி, பாரதியஜனதா தேசிய தலைவர்  அமித் ஷா குஜராத்தில் இருந்து தேர்ந்பதடுக்கப்படுகிறார்.

அதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவதை தொடர்ந்து, அவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, மத்திய அரசில், ஒருசில மத்திய அமைச்சர்கள் மரணம் மற்றும்  மாநில நிர்வாகங்களுக்கு சென்றுவிட்டதாலும் அந்த துறைகள் மற்ற மந்திரிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மத்திய மந்திரிசபை மாற்றம் விரைவில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அமித்ஷா எம்.பி.யாவதன் மூலம் அவரை மத்திய அமைச்சராக்க பாரதியஜனதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.