கொல்கத்தா

கொல்கத்தாவுக்கு வெளியூரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து கலவரம் செய்வதாக அமித்ஷா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறம் சாட்டி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரின் வடக்கு பகுதியில் நேற்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஒரு சாலைப் பேரணியை நடத்தினார். அதில் வன்முறை வெடித்தது. இதில் பாஜக மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதிக் கொண்டனர் இந்த வன்முறையில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தபட்டன. பிரபல வங்க அறிஞரான ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது.

இது குரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கொல்கத்தா நகரில் குழப்பம் உண்டாக்க ராஜஸ்தான், உ பி, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மநிலத்தில் இருந்து குண்டர்களை அழைத்து வந்துள்ளார். இது குறித்து எந்த ஒரு தேசிய மற்றும் வங்க தொலைகாட்சிகள் செய்தியில்  தெரிவிக்கவில்லை. அந்த தொலைக்காட்சிகள் பாஜகவுக்கு தரகர் வேலை பார்த்து வருகின்றன. அதனால் அவைகளை கண்டு கொள்ள வேண்டாம்.

அமித்ஷாவின்ன் சாலை பேரணி முடிந்த பிறகு அவர் அழைத்து வந்த குண்டர்கள் கலவரத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் வித்யாசாகர் கல்லூரியில் அமைக்கப்பட்ட பந்தலுக்கு தீ வைத்து ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர். இது போன்ற ஒரு அவமானகரமான செய்கையை நக்சல்களும் செய்தது கிடையாது. நாம் அவர்களை விடப்போவதில்லை. பாஜகவுக்கு விரைவில் தகுந்த பதில் அளிப்போம்.

அமித் ஷா அவர்களே, நீங்கள் வித்யாசாகர் மீது கை வைத்திருக்கும் போது உங்களை குண்டர் என அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? உங்கள் கொள்கைகளையும் உங்கள் வழிமுறைகளையும் நான் வெறுக்கின்றேன். வித்யா சாகர் சிலை உடைப்புக்கு எதிராக புதன் கிழமை அன்று எங்கள் கட்சி போராட்டம் நடத்த உள்ளது. நமது முன்னோர்களை மதிக்க தெரியாத பாஜகவுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.