பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வீடு திரும்பினார்

டில்லி

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா எய்ம்ஸ் மருந்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு அடைந்தார். அதை ஒட்டி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தமக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதை அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவருக்கு உடல்நிலை தேற வேண்டும் என டிவிட்டரில் பல பாஜக தொண்டர்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அவர் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்த தகவலை பாஜக ஊடகப் பிரிவு தலைவர் அனில் பலூனி தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டரில், “பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளார். அவருக்காக பிரர்த்தனி செய்த அனைவருக்கும் நன்றி” என பதிந்துள்ளார்.