மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்: வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14ம் தேதி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவு வர வீடு திரும்பினார்.

ஆனாலும் மீண்டும் உடல்நலன் பாதிக்கப்பட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆகஸ்ட் 31ம் தேதி வீடு திரும்பினார். வீட்டில் இருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட கடந்த 13ம் தேதி மறுபடியும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந் நிலையில் இன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  அமித் ஷா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.