கலவரம் ஏற்படுத்தவே அமித்ஷா கர்நாடகா வருகை…..சித்தராமையா

பெங்களூரு:

கர்நாடக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக.வுக்கும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே அங்கு பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ பிரதமர் மோடி, அமித்ஷா என யார் வந்தாலும் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. கலவரத்தை ஏற்படுத்தவே அமித்ஷா கர்நாடகம் வருகிறார். மத கலவரத்தை தூண்டுவதே அவரது நோக்கமாக உள்ளது.

அவரது பேச்சுக்களும் இதன் அடிப்படையிலேயே உள்ளது. பொய் புகார்களை கூறுகிறார். அமைதியை சீர்குலைக்கும் அவரது முயற்சியை அனுமதிக்க மாட்டோம். சட்டத்தை யார் கையில் எடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.