ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் சென்னை வரும் அமித் ஷா

சென்னை

ன்றரை ஆண்டுகளுக்குப் பின் சென்னை வரும் அமித்ஷா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜக வியூகம் அமைத்து வருகிறது.   அதை ஒட்டி பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பாஜகவின் ஒவ்வொரு மாநில தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.   அந்த சந்திப்புக்காக தமிழகத்துக்கு அவர் நாளை காலை 11 மணிக்கு சென்னை வருகிறார்.   அவர் அப்போது தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் விருந்தினர் மாளிகையில் தங்க உள்ளார்.   அத்துடன் விஜிபி தங்க கடற்கரையில்  கட்சியின் பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பில் அவர் பாஜகவின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்து அணியின் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.   தற்போது பாஜக தமிழகத்தில் மிகவும் பலவீனம் அடைந்துள்ளதால் அதை பலப்படுத்தும் ஆலோசனையும் நடைபெற உள்ளது.   அதே நேரத்தில் பாஜக நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்துப் பேச அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

நாளை இரவு சென்னையில் தங்கும் அமித்ஷா நாளை மறுநாள் காலை டில்லி திரும்பிச் செல்கிறார்.   அமித்ஷா ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதி தமிழகம் வர இருந்தது ரத்தானது.  அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 23, 24 ஆம் தேதியின் தமிழக பயணமும் ரத்தானது.   தற்போது சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அமித்ஷா சென்னை வருகிறார்.

கார்ட்டூன் கேலரி