Random image

தெலங்கானா தேர்தல் குறித்து பேச அமித்ஷாவுக்கு அருகதை இல்லை: ராமாராவ் அதிரடி பதில்

ஐதராபாத்:

தெலங்கானாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தது குறித்து மாநில அரசிடம்  கேள்வி எழுப்ப அமித்ஷாவுக்கு அருகதை கிடையாது என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மகன் ராமாராவ் ஆவேசமாக கூறினார்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியே சந்திக்கும் நோக்கி, மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. இதை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடுமையாக விமர்சனம் செய்தார்.

தெலங்கானா மாநில அமைச்சர் ராமாராவ் (முதலவர் சந்திரசேகர ராவின் மகன்)

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தெலங்கானா மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சரும், முதல்வர் சந்திர சேகரராவின் மகனுமான  ராமராவ், தெலங்கானா சட்டப்பேரவை கலைப்பு பற்றி அமித்ஷா எப்படி கேள்வி எழுப்ப முடியும்.

ஏற்கனவே மோடி குஜராத் முதல்வராக இருந்த போது பி 2002ல் முன்கூட்டியே தேர்தல் நடத்தவில்லையா? 2004ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தவில்லையா? இவர்கள் செய்தது சரி என்றால் தெலங்கானா அரசு முன்கூட்டியே தேர்தலை சந்திக்க வசதியாக சட்டப்பேரவையை கலைத்தது மட்டும் எப்படி தவறு என்று கூறமுடியும்? என்று அதிரடியாக பதிலடி கொடுத்தார்.

மேலும்,  மத்திய அரசு எந்த உதவியும் செய்யாமலேயே நாங்கள் 17.17 சதவீத வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம் என்பதை இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று கூறியவர்,  தெலங்கானா மற்றும் ஆந்திராவை மத்திய பாஜ அரசு ஏமாற்றிவிட்டது.

தெலுங்கு மொழி ேபசும் மக்கள் மத்தியில் ஓட்டு கேட்க பாஜ.வுக்கு எந்தவித தகுதியும் கிடையாது. இந்த தேர்தலில் தெலங்கானாவில் வெற்றி பெறப்போவதாக பாஜ தலைவர்கள் பேசி வருகிறார்கள். எப்படி இங்கு அவர்களால் வெற்றி பெற முடியும்?

ராமராவின் ஆவேச பதிலடி மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.