டில்லியில் அமித் ஷா – அஜித் தோவல் இன்று சந்திப்பு

டில்லி

த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை திடீரென நிறுத்தப்பட்டு பக்தர்கள் உடனடியாக திருப்பி அனுப்ப்பபட்டுள்ளன்ர். அத்துடன் ராணுவப் படைகள் காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர். இன்று மேலும் சில  படை வீரர்கள் பூஞ்ச் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அங்குள்ள மக்கள் வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காஷ்மீரில் தற்போது நிலைமை சரியாக உள்ளதாகவும் நாளை நடப்பதைப் பற்றி தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறியது மாநில மக்களிடையே மேலும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் இன்று மதியம் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்  ஷாவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சந்தித்துப் பேசி வருகின்றனர். அவர்கள் பேச்சு விவரம் குறித்து எவ்வித தகவலும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆயினும் இது காஷ்மீர் நிலவரம் குறித்த ஆலோசனை எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.