மோடியைக் கவிழ்க்க அமீத்ஷா முயற்சி : காங்கிரஸ் முதல்வர் திடுக்கிடும் தகவல்..

ராய்ப்பூர்

மோடியைக் கவிழ்க்க அமித்ஷா முயற்சி செய்வதாக சத்தீஸ்கர் முதல்வர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் முதல் அமைச்சராக இருப்பவர், பூபேஷ் பாகல். அவர் நேற்று ராய்ப்பூரில்  செய்தியாளர்களை சந்தித்த போது, மோடியை கவிழ்க்க உள்துறை அமைச்சர் அமீத்ஷா முயற்சி செய்து வருவதாகத் திடுக்கிடும் செய்தியைத் தெரிவித்தார்.

பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம்,  ‘’ மோடிக்கும் அமீத்ஷாவுக்கும் இடையே சமீப காலமாக நல்லுறவு இல்லை என முன்பே சொல்லி இருக்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குப் பிறகு மோடியின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

அதன் பின் பேசிய மோடி, ’’தேசிய மக்கள் பதிவேடு அமல் படுத்தப்பட மாட்டாது’’ என்றார்.  ஆனால் அமீத்ஷா’’ நாங்கள் அண்மையில் எடுத்த முடிவுகளில் இருந்து ஒரு இஞ்ச கூட பின் வாங்க மாட்டோம் ‘’ என்கிறார்.

யார் சொல்வது உண்மை?

இதனால் தான் மீண்டும்  சொல்கிறேன்.. மோடியைப் பிரதமர் பதவியில் இருந்து கவிழ்க்க அமீத்ஷா முயற்சி செய்கிறார்’’ என்று அதிரடியாகத் தெரிவித்த பூபேஷ் பாகல்,’’ டில்லி கலவரத்தை அடக்க பா.ஜ.க.அரசு ஒரு போதும் விரும்பாது.அங்குக் குழப்பம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்’’ என்று குற்றம் சாட்டி உள்ளார்.

அதே வேளையில் அமெரிக்க அதிபர் டிரம்ம்போடு மோடி பிஸியாக இருந்த நிலையில், டில்லி கலவரத்தை அடக்கும் ஆலோசனைக்கான அவசர கூட்டத்தை நடத்த அமீத் ஷா கழட்டிவிடப்பார் என்றார் என்று காங்கிரஸார் நக்கலடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

– ஏழுமலை வெங்கடேசன்

கார்ட்டூன் கேலரி