Random image

ஐதராபாத்தில் போட்டியிட அமித்ஷா தயாரா?….அசாதுதீன் ஒவைசி சவால்

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐதராபாத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. ஆரம்பத்தில் ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த சந்திரசேகர ராவ் சுயநலத்துக்காக சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு உடனடியாக தேர்தல் வைக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்’’ என்றார்.

இந்நிலையில் ஐதராபாத் எம்.பி.யும் அனைத்திந்திய மஜ்லிஸ்- இ-இத்தெஹாடுல்- முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி கூறுகையில்,‘‘ வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து ஐதராபாத் தொகுதியில் போட்டியிட அமித்ஷா தயாரா?. தெலங்கானாவில் 5 எம்.பி.க்களையும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இழந்துவிடும்’’ என்றார்.