டெல்லி

யோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு,  இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்து உள்ளார்.

பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த அயோத்தி நிலம் சர்ச்சை தொடர்பான வழக்கில்,  உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இன்று  பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி,  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர்  ராமஜென்ம பூமி  இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்  என்றதுடன்,.  இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் ஒதுக்க வேண்டும் எனவும் கூறியது.

உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில்,  தீர்ப்பு குறித்து டிவிட் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா,   ”அயோத்தியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்சைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இன்று அளித்துள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல். தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரும் அமைதி, மதநல்லிணக்கத்தைக் காக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண்பதற்காகப் போராடிய அமைப்புகள், சன்னியாசிகள், பெயர் தெரியாத மக்கள் லட்சக்கணக்கானோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” 

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.