“மே. வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்” – அமீத்ஷா ஆருடம்

 

கொல்கத்தா :

மே.வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது..

மம்தாவை வீழ்த்தி விட்டு, ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. அந்த, மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

பழங்குடியின மக்கள் பெருமளவில் வசிக்கும் ஜங்கள் மகால் பகுதியில் பா.ஜ.க. அனைத்து தொகுதிகளையும் அள்ளியது.

அந்த பகுதியை உள்ளடக்கிய பங்குரா மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் மே.வங்க மாநில மக்களுக்கு கிடைக்க விடாமல் மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்தியுள்ளார்” என குற்றம் சாட்டினார்.

“அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மம்தா வீழ்த்தப்படுவார்” என்று கூறிய அமீத்ஷா “மே.வங்க ,மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்” என்றார்.

– பா. பாரதி