நாடாளுமன்ற தேர்தல் வரை தேசிய தலைவராக அமித்ஷா நீடிப்பு…பாஜக செயற்குழு ஒப்புதல்

டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் வரை தேசிய தலைவர் பதவியில் அமித்ஷா நீடிப்பார் என்று பாஜக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த அமித்ஷா பேசுகையில்,‘‘ வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்’’என்றார்.

இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை தேசிய தலைவராக அமித்ஷா நீடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்குழு கூட்டம் நாளையும் தொடர்ந்து நடக்கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Amit Shah will continue asNational Leader till Parliamentary Elections BJP Executive Committee approved, நாடாளுமன்ற தேர்தல் வரை தேசிய தலைவராக அமித்ஷா நீடிப்பு...பாஜக செயற்குழு ஒப்புதல்
-=-