காஷ்மீர் பிரச்சினை: உயர்அதிகாரிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை!

டில்லி:

காஷ்மீர் பிரச்சினை குறித்து, மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா இன்று உயர்அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்துகிறார்.

நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டு வரும் சத்தீஷ்கார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், மராட்டியம், தெலுங்கானா உள்பட 10 மாநிலங்களில்  முதல்வர்களை அழைத்து, நேற்று ஆலோ சனை நடத்திய அமித்ஷா அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

இந்த நிலையில், காஷ்மீரில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய உள்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.