பட விளம்பரத்துக்காக தமிழ் பேசும் அமிதாபும் அமீர்கானும்

பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் பட விளம்பரத்துக்க்காக தமிழில் பேசி உள்ளனர்.

இந்தித் திரைப்படமான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்னும் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அமீர் கான் ஆகியோர் முதன் முறையாக இணைந்துள்ளனர்.   இந்த படம் விஜய் கிருஷ்ணா ஆசார்யா இயக்கத்தில் உருவாகி உள்ளது.

முக்கிய கதாபாத்திரத்தில் கத்ரினா கைஃப் நடித்துள்ளார்.    இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியாக உள்ளது.    இந்தப் படத்தை யஷ்ரஜ் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.   இந்த படத்தின் விளம்பரத்துக்காக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் ஆகிய இருவரும் தமிழில் பேசி உள்ளனர்.   இந்தப் படத்தின் டீசர் இன்னும் வெளியாகாத நிலையில் இவர்கள் தமிழில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.   இந்த விளம்பர வீடியோ ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கார்ட்டூன் கேலரி