லட்சம் பேருக்கு ரேஷன்..  அமிதாப் அசத்தல் ..

லட்சம் பேருக்கு ரேஷன்..  அமிதாப் அசத்தல் ..


21 நாள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஜென்மங்களில், சினிமாவில் வேலை பார்க்கும் தினக்கூலிகள் முக்கியமானவர்கள்.

அவர்களில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் தேவைப்படும் ரேஷன் பொருட்களை( அரிசி, பருப்பு உள்ளிட்டவை) இலவசமாக வழங்க முன் வந்துள்ளார், மெகா ஸ்டார் அமிதாப் பச்சன்.

இதில் என்ன ஸ்பெஷல், தெரியுமா?

இந்திக்காரர்களுக்கு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள சினிமா தொழிலாளர்களுக்கும் இந்த உதவி கிடைக்கும் என்பது தான்.
இதற்குப் பெரிய ’நெட் வொர்க்’ தேவைப்படுமே?

அதையும் கன கச்சிதமாக செய்து முடித்துள்ளார், மெகா ஸ்டார்.அமிதாப்.

அவரை வைத்து குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி லாபம் சம்பாதித்த சோனி பிக்சர்ஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகியோர் அமிதாப்புக்கு துணையாக நிற்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள பிரபல மளிகை கடைகள் மூலம் இந்த பொருட்கள் வழங்கப்படும்.

இந்திய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பிடம், அதன் தொழிலாளர்கள்  பட்டியல், அமிதாப் தரப்பால் கோரப்பட்டுள்ளது.
அவர்கள் கொடுக்கும் பட்டியலில் இருந்து, உதவி தேவைப்படும் ஒரு லட்சம் பேர் அடங்கிய  ‘லிஸ்ட்’ தயாரிக்கப்படும்

அவர்களுக்கு, டிஜிட்டல் கூப்பன்கள்  தரப்படும்.

அந்த கூப்பன்களை கொண்டு, சம்மந்த பட்ட கடைகளில் மளிகை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

–  ஏழுமலை வெங்கடேசன்