அமிதாப்பச்சன் குடும்பத்தில் குடுமிபிடி…போட்டு உடைத்த அமர்சிங்

லக்னோ:

அமிதாப்பச்சன் குடும்பத்தில் நடக்கும் சண்டையை அமர்சிங் வெளிப்படுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறதே? என்று பத்தரிக்கையாளர் சந்திப்பில் அமர்சிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் அதற்கு நேரடியாக விளக்கம் அளிக்காமல் அமிதாப்பச்சன் குடும்பத்தை வம்புக்கு இழுந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியது…

நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்னைக்கும் நான் தான் காரணம் என்கிறார்கள். அம்பானி குடும்பத்தில் பிளவு ஏற்பட்டதற்கும் நான் தான் காரணம் என்றார்கள். நான் ஏதோ இவர்களுக்குள் மகாபாரதம் நடத்தியது போல் கூறுகிறார்கள். நான் பார்த்த வரை அமிதாப்பச்சனும், அவரது மனைவியும் பிரிந்து வாழுகிறார்கள்.

ஜெயாபச்சன் பிரதிக்ஷாவுடனும், மற்றொருவர் ஜனாக் பங்களாவிலும் வசிப்பதை பார்த்திருக்கிறேன். ஐஸ்வர்யாராய் பச்சனுக்கும் ஜெயாவுக்கும் பிரச்னை. விட்டால் இதற்கு நான் தான் காரணம் என்று கூறுவார்கள். இதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது என்றார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் குடும்ப பிரச்னையை அமர்சிங் அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு அமிதாப்பச்சன் எப்படி பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.