தீபிகாவுக்கு அமிதாப்பச்சன் சவால்..

டிகர் அமிதாப்பச்சன் இந்தியில் நடித்தி ருக்கும் படம் குலாபோ சிடாபோ. இதில் அடையாளம் தெரியாதளவுக்கு முதிர்ந்த வயது தோற்றத்தில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார்.

இப்படம் ஒடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்துக்கு புரமோஷன் செய்யும் விதமாக ஒரு குறிப்பிட்ட வசனத்தை தொடர்ந்து ஐந்து முறை சொல்ல வேண்டும் என்று சவால் விட்டிருக்கிறார் அமிதாப். அந்த வசனத்தை அவர் இடைவிடாமல் சொல்லும் வீடியோவை யும் பகிர்ந்திருக்கிறார்.
நாக்கை பதம்பார்க்கும் இந்த வசனம் பேசும் சவாலை தீபிகா படுகோனே, ரன்பீர்கபூர். அலியாபட், விராத் கோஹ்லி, பூமிபெடுன்கர், ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு விட்டிருக்கிறார்.

You may have missed