நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் படத்தில் அமிதாப் பச்சன் ஒப்பந்தம்….!

‘சாஹோ’ படத்தைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது.

நாக் அஷ்வின் இயக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தீபிகா படுகோன், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாக பிரபாஸ் – நாக் அஷ்வின் படம் அமைந்துள்ளது.

நேற்று (அக்டோபர் 8) ‘பிரபாஸ்21’ படம் தொடர்பான பெரிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்தது.

https://twitter.com/VyjayanthiFilms/status/1314423325486055425

அதன்படி, இன்று (அக்டோபர் 9) ‘பிரபாஸ் 21’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஒப்பந்தமாகியுள்ள அடுத்த படமாக ‘பிரபாஸ் 20’ அமைந்துள்ளது.