மைக்கேல் ஜாக்சன் போல் நடனமாட முடியாமல் திணறிய அமிதாப்பச்சன்

 

1988 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கங்கா ஜமுனா சரஸ்வதி’ என்ற இந்தி படத்தை பிரபல இயக்குநர் மன்மோகன் தேசாய் இயக்கி தயாரித்திருந்தார்.

கங்கா கேரக்டரில் அமிதாப்பச்சனும், ஜமுனா வேடத்தில் மீனாட்சி சேஷாத்திரியும், சரஸ்வதியாக ஜெயப்பிரதாவும் நடித்திருந்தார்கள்.


இவர்கள் தவிர மிதுன் சக்கவர்த்தி, அம்ரிஷ் புரி, அருணா இராணி உள்ளிட்டோரும் நடித்திருந்த இந்தப்படம் அமிதாப் சினிமா கேரியரில் முக்கிய படம் ஆகும்.

இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் போல், ஒரு பாடலுக்கு அமிதாப்பச்சன் நடனம் ஆட வேண்டும் என இயக்குநர் மன்மோகன் தேசாய் விரும்பினார்.

ஜாக்சன் போன்று ‘காஸ்ட்யூம்’ தைத்து அமிதாப்புக்கு அணியச்செய்து ‘ஸ்டில்’ போட்டோவும் எடுத்து விட்டார்கள்.

ஆனால் ஜாக்சன் போல் நடனம் ஆட அமிதாப்புக்கு வரவில்லை.
இதனால், அந்த படத்தில் அமிதாப்பின், ‘ஜாக்சன் நடன’ காட்சி இடம் பெறவில்லை.

மைக்கேல் ஜாக்சன் வேடத்தில் தான் இருக்கும் புகைப்படத்தை இப்போது தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அமிதாப்பச்சன், மேற்கண்ட தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

– பா. பாரதி