நடிகர் அமிதாப் பச்சனுக்கு டில்லி  பார் கவுன்சில் எச்சரிக்கை  நோட்டீஸ்

விளம்பரப் படம் ஒன்றில் வழக்கறிஞர் போல் உடை அணிந்து நடித்ததற்காக  டில்லி பார் கவுன்சில் கடும் எச்சரிக்கையுடன் அமிதாப் பச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

உணவுப்பொருள் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடித்திருந்தார். இந்த விளம்பரத்தில் அமிதாப் பச்சன் வழக்கறிஞர் உடையில் அறை ஒன்றில் அமர்ந்திருப்பார், அப்போது இருவர் அவர் அறைக்குள் நுழைந்து பாவ் பாஜியை அமிதாபுக்கு அளிப்பார், அதனை அவர் ருசித்து விட்டு தன் பிராண்டின் சுவையே பாவ்பாஜி சுவை என்று கூறுவார்.

விளம்பரத்தில் வழக்குரைஞர் உடையை அணிந்து அமிதாப் நடித்ததற்கு வழக்குரைஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட விளம்பரத்தை வெளியிட்ட இதனையடுத்து யூ டியூப் மற்றும் ஊடக நிறுவனத்துக்கு டில்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், “இந்த விளம்பரத்தை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  உடனடியாக இந்த விளம்பரத்தை ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும். இது குறித்து 10 நாட்களுக்குள் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அமிதாப் பச்சன் தனது மகள் ஸ்வேதா பச்சனுடன் நடித்த நகைக்கடை விளம்பரம் ஒன்றில் வங்கி ஊழியர்களை தவறாகச் சித்தரித்ததாக போராட்டங்கள் நடந்தது  குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published.