“என் தந்தை அழுததை முதன் முறையாக பார்த்த தருணம்” பழைய புகைப்படத்தை வெளியிட்டு அமிதாப்பச்சன் உருக்கம்…

 

இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், தனது பழைய புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இது தொடர்பான பசுமை நினைவுகளை, ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக, அமிதாப்பச்சன், நேற்று ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தை ஹர்வன்ஷ் ராய் பச்சன் காலில் விழுந்து, தான் ஆசி பெறும் கறுப்பு- வெள்ளை போட்டோவை வெளியிட்டுள்ளார்.

“விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிய போது எடுத்த படம் இது. என் தந்தை அழுததை அப்போது தான் பார்த்தேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த படத்தில் சின்ன வயது அபிஷேக் பச்சன், மிரட்சியுடன் காட்சி அளிக்கிறார்.

இந்த படத்தில் என்ன விஷேசம்?

1982 ஆம் ஆண்டு ‘கூலி’ படத்தின் சண்டை காட்சியில் வில்லன் நடிகர் புனித் இஷாருடன், அமிதாப்பச்சன் மோதும் காட்சியில் அடிபட்டு காயம் அடைந்தார்.

மருத்துவமனையில் பல மாதங்கள் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பிய போது எடுத்த படம் தான் அது.

அந்த விபத்தில் சிக்கி, தான் மறுபிறவி எடுத்து வந்ததாக அந்த சம்பவம் குறித்து அமிதாப்பச்சன் அடிக்கடி நினைவு கூறுவதுண்டு.

– பா. பாரதி