கவுன் பனேகா க்ரோர்பதியின் 12-வது சீஸனின் படப்பிடிப்பு தொடக்கம் என அமிதாப் பச்சன் அறிவிப்பு…!

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொலைக்காட்சி, திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் தடை இருந்தது.

தற்போது பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 12-வது சீஸன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

‘தங்கல்’ திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் கவுன் பனேகா க்ரோர்பதியின் இந்த சீஸனுக்கான போட்டியாளர்கள் தேர்வு முழுக்க முழுக்க டிஜிட்டலாக இணையம் மூலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற்று மீண்டு எழுந்த அமிதாப் பச்சன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் .