கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் அமிதாப் பச்சன்….!

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11-ம் தேதி இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்குக் கொரோனா தொற்று உறுதியாகவே, இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமை இன்று நானாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நடிகரின் மகன் அபிஷேக் பச்சன் இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் .

அபிஷேக் பச்சன் ” எனது தந்தை, தனது சமீபத்திய கோவிட் -19 சோதனையில் எதிர்மறையை சோதித்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். அவர் இப்போது வீட்டில் இருந்து ஓய்வெடுப்பார். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் அவருக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி.” என பதிவிட்டுள்ளார் .

கார்ட்டூன் கேலரி