பாலிவுட் சூப்பர்ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தனக்கு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தனது பிளாக்கில் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு என்ன பிரச்சனை, எதற்காக அறுவை சிகிச்சை என்பது பற்றி அவர் எந்த விபரத்தையும் பகிரவில்லை.

கடந்த வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் .