அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது…!

இந்திய திரைப்பட சினிமாவின் தந்தை என்றும் அழைக்கப்படும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்-இயக்குனர் தாதாசாகேப் பால்கேவின் நினைவாக தாதாசாகேப் பால்கே விருது 1969-ஆம் ஆண்டில் துவங்கி வழங்கப்பட்டு வருகிறது.

திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் சார்பாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதில் ஒரு ஸ்வர்ணா கமல் மற்றும் ரூ .10 லட்சம் ரொக்கம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கார்ட்டூன் கேலரி