குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய அமிதாப்பச்சன்…

 

இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் அனைத்து மத பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கிறிஸ்துமஸ் விழாவையும் அவர் மும்பையில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் உடை அணிந்து மும்பையில் உள்ள ஓர் இடத்தில் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழந்துள்ளனர்.

அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், மகள் ஸ்வேதா மற்றும் பேரன் –பேத்திகளுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்ட புகைப்படங்களை அமிதாப்பச்சன் பேத்தி நவ்யா நந்தா , தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அமிதாப் மகள் ஸ்வேதாவின் மகளான நவ்யா, இரு தினங்களுக்கு முன்னர் தான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து, அபூர்வ குடும்ப போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.

அந்த வரிசையில் தனது குடும்பத்தாரின், கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோக்களையும் நவ்யா நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

– பா. பாரதி

You may have missed