உத்திரப் பிரதேசம் : தேர்வு நுழைவுச் சீட்டில் அமிதாப் பச்சன் புகைப்படம்
பைசாபாத்
உ.பி. மாநில மாணவர் தேர்வு நுழைவுச் சீட்டில் ஒரு மாணவரின் புகைப்படத்துக்கு பதிலாக அமிதாப் பச்சன் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது..
உத்திர பிரதேச மாநிலத்தில் பைசாபாத்தில் ரவீந்திர சிங் ஸ்மராக் மகாவித்யாலயா என்னும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளது. ராம் மனோகர் லோகியா பல்கலைக்கழகத்தின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு அமித் திவேதி என்னும் மாணவர் பி எட் பயின்று வருகிறார்.
அமித் தனதுஇரண்டாம் வருடத் தேர்வு எழுத விண்ணப்பம் அளித்துள்ளர். அதில் அவருடைய தெளிவான புகைப்படத்தை பதிந்துள்ளார். அயினும் அவருடைய தேர்வு நுழைவுச் சீட்டில் அவருடைய புகைப்படத்துக்கு பதில் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ள்து. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கல்லூரி நிர்வாகத்திடம் முறை இட்டுள்ளார்.
அவர் புகைப்படம் இல்லாததால் தேர்வு மையத்தில் அவரிடம் இருந்து மேலும் பல ஆவணங்களை கோரி சரி பார்த்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித் திவேதி தேர்வுகளை நன்கு எழுதிய போதிலும் தனது சான்றிதழ்களில் அமிதாப் பச்சன் புகைப்படம் இடம் பெற்றிருக்கும் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.