கொரோனா தொற்று தொடர்பாகத் தான் பகிர்ந்த தவறான பதிவை நீக்கினார் அமிதாப் பச்சன்….!

 

கொரோனா வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில்கொரோனா தொற்று ஈக்கள் வழியாகப் பரவுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமீபத்தில் சீனாவில் ஒரு ஆராய்ச்சியில் மனிதர்களின் சுவாசத்தை விட அவர்களது கழிவுகளில் கொரோனாகிருமி அதிக நேரம் உயிரோட இருக்கும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு ஈ அதில் உட்கார்ந்துவிட்டு பின் காய்கறி, பழங்கள் என நாம் உண்ணும் உணவில் உட்கார்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகப் பரவும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தவறான தகவல் தற்போது நீக்கப்பட்டுள்ளது.மேலும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் இந்த விஷயத்தை மறுத்துள்ளார். தொற்று நோய்கள் ஈக்கள் மூலம் பரவாது என்று கூறியுள்ளார்.