மும்பை

தனிக்கட்சி துவக்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிக்கு நடிகர் அமிதாப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமிதாப், “ரஜினி எனது சிறந்த நண்பர். மிகுந்த மனிதாபிமானமுள்ளவர். தற்போது அவர், அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார். அரசியலிலும் அவர் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று அமிதாப் தெரிவித்துள்ளார்.