அமிதாப்பச்சன் நடிக்க அஜய் தேவ்கான் இயக்கும் ‘’மே டே’’ 

அமிதாப்பச்சன் நடிக்க அஜய் தேவ்கான் இயக்கும் ‘’மே டே’’
இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து அஜ்ய தேவ்கான் ‘’ மேஜர்ஜாப்’’ காக்கி’ ;சத்யாகிரகா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
’’ஷிவாய்’’ ‘’ யூ மே அவர் கான்;; ஆகிய படங்களையும் டைரக்ட் செய்துள்ள, அஜய் தேவ்கான் அமிதாப்பச்சன் நடிக்கும் புதிய இந்திப்படம் ஒன்றை தயாரித்து இயக்குகிறார்..
இந்த படத்துக்கு ‘’ MAY DAY’’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அஜய் தேவ்கான் விமான பைலட்டாக நடிக்கிறார்.
அமிதாப்பச்சன் நடிக்கும் வேடம் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் பிலில் சிட்டியில் ஆரம்பமாகிறது.
இப்போது ‘சோனி தொலைக்காட்சிக்காக குரோர்பதி நிழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் ’பிஸி’  யாக இருக்கும் அமிதாப்பச்சன் , கைவசம் பிரமாஸ்திரா உள்ளிட்ட மூன்று படங்கள் உள்ளன.
அஜய் தேவ்கான் ‘’’பூஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா;’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அமிதாப்பச்சனை வைத்து அஜய் தேவ்கான் இயக்கும் முதல் படம் இது.
-பா.பாரதி.