“கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை..” :  சுப்பிரமணிய சுவாமி ட்வீட்

திமுக தலைவர் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கமாட்டார் என சுப்ரமணிய சுவாமி டிவிட் செய்துள்ளார்

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கான நினைவஞ்சலி கூட்டம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  தி.மு.க. சார்பில் நடைபெறும் இந்த நினைவேந்தல் கூட்டத்தில் அகில இந்திய அளவிலான அரசியல்  தலைவர்கள் பலர் பங்கேற்க இருக்கிறார்கள்.

இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கும் தி.மு.க. சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பார் என்று திமுக வட்டாரத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அமித் ஷா முடிவெடுத்துள்ளார் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி என சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அமித்ஷா நலம் விசாரித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.