வேட்புமனு தாக்கல் – சொத்துக் கணக்கை மறைத்த அமித்ஷா

புதுடெல்லி: வேட்புமனு தாக்கலின்போது, தனது சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் தந்துள்ளதால், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென தேர்த‍ல் கமிஷனிடம் கேட்டுக் கொண்டுள்ளது காங்கிரஸ்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா. அவர் தனது வேட்புமனு தாக்கலின்போது, சமர்ப்பித்த சொத்து விபரங்களில், சிலவற்றை மறைத்துவிட்டார்.

முதலாவது, காந்திநகரில் அவருக்கு சொந்தமான வீட்டுமனை. இரண்டாவது, குஜராத் மாநிலத்தின் ஒரு பெரிய வணிக வங்கியிலிருந்து அவர் மகனுக்காக வாங்கிய கடன். இதற்கு அமித்ஷாதான் சாட்சியாளர்.

எனவே, இந்த இரண்டு விபரங்களையும் அவர் மறைத்துள்ளார். இது கவனக்குறைவால் நடந்த விஷயமல்ல. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நடந்த விஷயம்.

எனவே, இதன்மீது நடவடிக்கை எடுத்து, அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்ய வேண்டுமென, தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.