போலி புகைப்படத்தைத் தெரியாமல் பகிர்ந்து நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கும் அமிதாப்….!

கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார்.

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒன்றை யாரோ பகிர அமிதாப் அதை ரீட்வீட் செய்து, “பாரு உலகமே, நாங்கள் எல்லோரும் ஒன்று” என்று குறிப்பிட்டிருந்தார்.

போலியான வாட்ஸ் அப் ஃபார்வர்டை பகிர்ந்ததா அவரை நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

”வாட்ஸ் அப் வந்து பிரபலங்களின் முகத்திரையைக் கிழித்து அவர்கள் முட்டாள்தனத்தைக் காட்டிவிட்டது” என்று பலரும் பதிவிட்டிருந்தனர்.