அமிதாப், அபிஷேக்கிற்கு இன்னும் 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை..

--

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 77 வயதான அமிதாப் மற்றும் 44 வயதான அபிஷேக் ஆகியோர் நானாவதி மருத்துவம னையின் தனிமை வார்டில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீரான சிகிச்சையால் இருவரும் நல்லமுறையில் குணம் அடைந்து வருகின்றனர் .

அவர்கள் குறைந்தது ஏழு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்” என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அமிதாப்பின் மருமகள், நடிகர் ஐஸ்வர்யா ராய் பச்சன், (வயது 46) மற்றும் எட்டு வயது பேத்தி ஆராத்யா பச்சனும் கொரோனா தொற்றுக்கு ள்ளாகி இருக்கின்றனர். அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தப் படுத்திக் கொண்டுள்ளனர்.
அமிதாப் குணம் அடைய அவரது ரசிகர் களும், நலம் விரும்பிகளும் பிரார்த் தனை செய்த்தனர். அவர்களுக்கு அமிதாப் தனது நன்றி தெரிவித்தார். “உங்கள் பிரார்த்தனை களின் பலன், பாசம் மற்றும் நல்வாழ்த்துக்கள் ஆகியவற்றின் அன்பு வெள்ளத்தில் மூழ்கியி ருக்கிறேன். என் தனிமைப்படுத்தலின் இருளை நீங்கள் பிரகாசமாக்கிய விதத்தை என்னால் விளக்கிக் கூற வார்த்தைகள் இல்லை. நான் உங்களுக்கு தலை” என அமிதாப் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
அமிதாப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட யடுத்து அவரது பங்களாக்களில் பணிபுரியும் 26 ஊழியர்கள் கோவிட் -19 க்கு பரிசோதிக்கப் பட்ட்னர். அவர்களுக்கு தொற்று உறுதியாக வில்லை என் கூறப்படுகிறது.