2019-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருதுகளை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி வருகிறார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கலந்து கொண்டுள்ளார்.

வழக்கமாக, தேசிய விருதுகள் குடியரசுத் தலைவரின் கைகளால் வழங்கப்படுவது தான் வழக்கம். ஆனால், இம்முறை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வஹாங்கியுள்ளார் .

இந்த நிலையில் அமிதாப்பச்சனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதால் அவர் இந்த விருது விழாவில் பங்கேற்க முடியாது என அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கடுமையான காய்ச்சல் காரணமாக பயணம் செய்ய டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே நாளை (இன்று) டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாது. இது துரதிர்ஷ்டவசமானது. எனது வருத்தங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.