சென்னை:

திமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், சென்னை ஆர்கே.நகரில் அம்மா கல்வியகம் என்ற இணையதள சேவையை தொடங்கி வைத்தார்.

தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, அவர் காலமானதால் தற்போது காலியாக உள்ளது.. அங்கு வர இருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் அந்த தொகுதியை சுற்றி வருகின்றனர்.

ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்று அறிவித்து உள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினரும் ஆர்.கே.நகர் தொகுதியை குறி வைத்தே காய்களை நகர்த்தி வருகின்றனர்.

அதற்கு அடித்தளமாக அம்மா கல்வியகம் என்ற இணைய தள சேவையை அங்கு தொடங்கி உள்ளனர். சேவையை தொடங்கி வைத்து  பேசிய ஓபிஎஸ், இந்த இணையதளம், தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்ந்தவும், கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும் என்று கூறினார்.

இணையதள முகவரி:  www.ammakalviyagam.in 

இந்த இணைய தளத்தில், மாணவர்களுக்கு தேவையான படிப்பு பற்றிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

கணக்கு, ஐஐடிஜேஈஈ தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான கோர் கணக்கு, பிசிக்ஸ், கெமிஸ்டிரி பற்றிய தகவல்களும், அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனைகளும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான நடைமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வேலை தேடும் இளைஞர்களுக்கு ஏதுவாக  ஜாப் சர்ச்,  இளைஞர்கள் நேர்முக தேர்வை எப்படி எதிர்கொள்வது போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இணைய தளத்திற்குள் செல்வதற்கு முதலில் தங்களை பதிவு செய்துகொள்வது கட்டாயம்.

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் இந்த இணைய தளத்தில் உள்ளது. பொதுமக்களும், வேலைதேடும் இளைஞர்களும், மாணவ மாணவிகளும் இந்த இணைய தளத்தில் பதிவு செய்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். இளைஞர்களின் வாழ்வுக்கு ஒளியேற்றும் விதமாக இந்த இணைய தளம் அனைத்து அம்சங்களுடன் விளங்குகிறது.

ஓபிஎஸ் அணியினரின் உருப்படியான முதல் படி… தொடரட்டும் அவர்களது சேவை…