“அம்மா”.. தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல: எழுத்தாளர் வாசந்தி விளக்கம்

சில நாட்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா பற்றி வெளியான “அம்மா” என்கிற ஆங்கில புத்தகம், தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல என்று அப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் வாசந்தி தெரிவித்திருக்கிறார்.

download

பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாசந்தி, தமிழகமுதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பற்றி ஆங்கிலத்தல், 2012ம் ஆண்டு புத்தகம் எழுதினார்.  ஜெயலலிதாவின் பள்ளித்தோழிகளில் ஆரம்பித்து, அரசியலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு எதிரான கருத்துடைய அரசியல் பிரமுகர்கள், பத்தரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை சந்தித்து சிறப்பாக தொகுத்திருந்தார் வாசந்தி என அப்போது பேசப்பட்டது. இதை பெங்குவின் பதிப்பகம் வெளியிட இருந்தது.

புத்தகம் வெளியிடும் தருவாயில், அப்புத்தகத்துக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தை நாடினார் ஜெயலலிதா. புத்தகம் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், வாசந்தி, எழுதிய “அம்மா” என்ற ஆங்கில புத்தகத்தை ஜகர்நாத் பதிப்பகம் வெளியிட்டது.  தடை செய்யப்பட்ட புத்தம்தான் தற்போது வேறு பதிப்பகம் மூலம் வெளியாகியிருக்கிறது என்று ஒரு தகவல் பரவியது.  இது குறித்து செய்திகளும் வெளியாகின.

வாசந்தி
வாசந்தி

ஆனால் இந்த செய்தியை, நூலாசிரியர் வாசந்தி மறுத்திருக்கிறார்.

“நீதிமன்றம் தடை விதித்த புத்தகம் வேறு, இந்த, புதிய புத்தகம் வேறு. முந்தைய புத்தகம் முன்னூறு பக்கங்களுக்கும் மேல் உள்ள பெரிய புத்தகம். தற்போது வெளியாகியிருப்பது சிறு புத்தகமே. இது மொபைல் ஆப்-புக்காக வெளியிடப்பட்டது” என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Amma, book, New, tamilnadu, vaasanthi, அம்மா, தமிழ்நாடு, புதிய, புத்தகம், வாசந்தி
-=-