சென்னை,

மிழக அரசு சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ள ஸ்கூட்டர் மானியத்துக்கு, விண்ணப்பிக் கஇன்றே கடைசி நாள். இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு சென்றடைய வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா,  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  ‘ஸ்கூட்டர்’  வாங்கிக்கொள்ள ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ எனும் பெயரில் தமிழக அரசால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டு மானிய விலையில்  ‘ஸ்கூட்டர்’ வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான கடைசி நாள் இன்று. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக வட்டார போக்குவரத்து கழகங்களில் பெண்களின் கூட்டம் அலைமோதியது. அதன் காரணமாகவே விடுமுறை தினமான கடந்த சனிக்கிழமையும் வட்டார போக்குவரத்து கழகங்கள் வேலையில் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில், மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கான விண்ணப்பங்களை  சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். இன்று மாலை மாலை 5 மணியுடன் இதற்கான கெடு முடிவடைகிறது.

இதன் காரணமாக இன்றும் வட்டார போக்குவரத்து கழக அலுவலங்களில் பெண்கள் அதிக அளவு  குவிந்து வருகின்றனர்.

விண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி நாளை முதல் வரும் 10-ந் தேதி வரை நடைபெறும் என்றும், அதனைத்தொடர்ந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மானிய விலையில் ‘ஸ்கூட்டர்’ வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் 24ந்தேதி மறைந்த தமிழக முதல்வர். ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று, அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.