அம்மா இருசக்கர வாகன திட்டம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை,

ம்மா இருசக்கர வாகன திட்டம் மூலம் பயன்பெற விரும்பும் வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து உள்ளார்.

அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தின் மூலம்  தமிழக அரசு சார்பில் இருசக்கர வாகனம் பெற ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50% இவற்றில் எது குறைவோ அது வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள்  இன்று முதல் ( 22ந்தேதி)  பிப் 5ம் தேதிக்குள்  ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள்  கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலவலகம்,  கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் இலவசமாக இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதற்கு உதவியாக அம்மா இருசக்கர வாகன திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் எளிதாக இயக்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக பொருத்தப்பட்ட சக்கரங்கள் உடைய இருசக்கர வாகனங்கள் வாங்கலாம்.

அதிகபட்சமாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம், இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இதன்மூலம் பயன்பெற விரும்பும் சென்னையில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்கள், தங்களுக்கு விருப்பப்பட்ட வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம்.

சொந்த முதலீடு அல்லது வங்கிக்கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். 125 சி.சி.க்கு மிகாமல் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடிய வாகனத்தை வாங்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட புதிய, மாசு ஏற்படுத்தாத வாகனமாக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தால் பயனடையும் பெண்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராகவும், தமிழகத்தில் வசிப்பவராகவும், 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஓட்டுனர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் பிப்ரவரி 5-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவு தபால் மூலமோ சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில்  குறிப்பிடப்பட்டு உள்ளது.

வாகனம் வாங்க விண்ணப்பபிப்பது எப்படி?

https://patrikai.com/buy-a-vehicle-rs-25-thousand-subsidies/

கார்ட்டூன் கேலரி