அ ம மு க வேட்பாளர் வெங்காய மாலை அணிந்து வேட்பு மனு தாக்கல்

துரை

மதுரை மாவட்ட  ஊராட்சி தேர்தலில் அமமுக வேட்பாளர் வெங்காய மாலை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

வெங்காய விலை விண்ணை எட்டியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  வெங்காய விலையை வைத்துப் பல நெட்டிசன்கள் நகைச்சுவைகளாக அள்ளித் தெளித்து லைக்குகளை வாரி வருகின்றனர்.   பத்திரிகைகளிலும் இது தொடர்கிறது.

இது வெங்காய சீசன் ஆகி உள்ளது.  தேர்தலிலும் இந்த சீசனை பயன்படுத்த அரசியல் கட்சிகள் முனைந்துள்ளன   தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெங்காய விலை தேர்தல் பிரசாரத்தில் முதலிடம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.

அதை உண்மையாக்குவது போல் மதுரையை அடுத்த யா. ஒத்தக்கடையைச் சேர்ந்த பாஸ்கர் என்னும் அமமுக வேட்பாளர் 20 ஆம் வட்டம் உறுப்பினர் பதவிக்காகப் போட்டியிட உள்ளார்.   அவர் வெங்காய மாலை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.