அமமுக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது,

சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் ஆகியவற்றில் மும்ரமாக உள்ளது.

இரு கட்சிகளிலும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. மேலும் இரு கட்சிகளிலும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிவடைந்தது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட கடைசி நாளான இன்று விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது.