அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் புகழேந்தி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைப்பு

சென்னை: டிடிவி தினகரனின் வலதுகரம் போல செயல்பட்ட புகழேந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கிய போது அவரின் முக்கிய நபராக விளங்கியவர் புகழேந்தி. அமமுக சார்பில் பல இடங்களில் கருத்துகள், பேட்டிகள் என வலம்வந்தவர்.

அண்மைக்காலமாக, அவருக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதனால் விரைவில் அதிமுகவில் தம்மை இணைத்துக் கொள்வார் என்று தகவல்கள் கசிந்தன.

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் சந்தித்து பரபரப்பூட்டினார். ஆனால் எப்போது அதிமுகவில் இணைவார் என்று தெரியாமல் இருந்தது.

இந் நிலையில் இன்று அதிகாரப்பூர்வதாக தம்மை அதிமுகவில் இணைத்துக் கொண்டார் புகழேந்தி. சென்னையில் உள்ள அதிமுக அலுலவகத்துக்கு தமது ஆதரவாளர்களுடன் வந்த அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

 

 

 

கார்ட்டூன் கேலரி