அமமுகவில் இன்றும், நாளையும் வேட்பாளர் நேர் காணல்!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க தயாராகி வருகின்றன. இதையொட்டி, அதிமுக, திமுக கட்சிகளில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதனால், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த நிலையில், அமமுக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர் காணல் இன்று தொடங்குகிறது. இன்றும், நாளையும் அமமுக தலைமையகத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது.