திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடும்….டிடிவி தினகரன்

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அமமுக கட்சி போட்டியிடும். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் அலோசிக்கப்பட்டது. மகளின் ஆதரவு தங்களது கட்சிக்கு இருப்பதால் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்’’ என்றார்.

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2ம் ந்தேதி மதுரையில் இறந்தார். அவரைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி இறந்தார். இதனால் இந்த இரு தொகுதிகளும் காலியாக உள்ளது. இதற்கு இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி