அன்னிய செலாவணி மோசடி: ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் ரெய்டு

பெங்களூ;ர்:

ன்னிய செலாவணி மோசடி தொடர்பாக பெங்களூரில் உள்ள  ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு  இயங்கி வரும் ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தில், வருமான வரித்துறை மற்றும் அமலாத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று பிற்பகல் முதல் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

லண்டனை மையமாகக் கொண்ட என் ஜி ஓ நிறுவனமான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்,  உலகம் முழுவதும் 150 நாடுகளில் சுமார் 70 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை பயன்படுத்தி அதனை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தி வருவதாக அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த நிறுவனம், உள்துறை அமைச்சகத்தின் உரிய அனுமதியின்றி 36 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை பெற்றுள்ளதாக  அமலாக்கத்துறை  தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே இந்த அமைப்பின் கூட்டத்தில், காஷ்மீர் பிரச்சினை எழுப்பப்பட்டு, இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. அது தொடர்பாக ஆம்னஸ்டி  நிறுவனம்மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.