ரித்வார்

நேற்று கும்ப மேளா விழாவில் கலந்து கொண்டவர்களில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கும்ப மேளா விழா நடந்து வருகிறது.  இந்த கும்ப மேளாவின் போது கங்கையில் புனித நீராடினால் பாபங்கள் விலகும் என்பது ஐதீகம்.  இதையொட்டி நாடெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்களும் சாதுக்களும் ஹரித்வார் வந்துள்ளனர்.

தற்போது அரசு தரப்பில் கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் இருந்தால் மட்டுமே நகரில் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.   முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றல் எனப் பல விதிகள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஆனால் பலரும் இந்நகரில் முகக் கவசம் இன்றி தெருவில் நடமாடி வருகின்றனர்.  சமூக இடைவெளியும் பின்பற்றப்படுவது இல்லை.

இவ்வாறு விதிமீறல் செய்வோரைக் கண்காணிப்பதோ நடவடிக்கை எடுப்பதோ கிடையாது என அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.  இதனால் கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது.   நேற்று 28 லட்சம் பேர் வந்துள்ளனர்.  இவர்களைப் பரிசோதனை செய்ததில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உத்தரகாண்ட் அரசின் அலட்சியத்தால் பாதிப்பு மேலும் பன்மடங்கு அதிகரிக்கலாம் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.